Search This Blog

Monday, July 26, 2010

அடடா

என் பள்ளியில் 
என் பக்கத்துக்கு இருக்கை மாணவன் 
வேதியல் என்றால் எனக்கு சக்கரை 
என்றான் அவனோடு போட்டியிட 
நானும் நைட்ரிக் அமிலம் 
டார்டாரிக் அமிலம், சிலிகான் 
என்று கூறி சில்லிடுப்போனேன் 

என் எதிர் வீட்டு 
கன்னிப்பெண் கவி கணினி அறியாதவனாநீ 
என்றாள் என்றதற்காக ரோசத்தோடு 
சுட்டெலி ,ஆபரேஷன் சிஸ்டம்,ரோம், ராம் 
என்றெல்லாம் சொல்லி ஒரு 
வழியாக கணினி முறைகளை 
முறையாக கற்றேன் நானும் 

அடடே சிக்ஸ் பாக் இல்லையா என்று
பாசத்தோடு கூறிய அவள் சிஸ்டர்
சில்வண்டுக்காக ஜிம் சென்று 
தண்டால் ,பஸ்கி ,கர்லா கட்டை 
என்று சொல்லவேண்டி வராலாம் 
என்று நினைக்கின்றேன் 

அடடா நான் எனக்காக எந்த செயலையும் செய்ய 
முடியாது போலிருகிறதே 
போனால் போகட்டும் 
அந்த கவிமான் கூறிய 
படியாவது கவிதை எழுதலாம் 
என்றிருக்கிறேன் என்ன நான் 
செய்வது சரிதானா ? சரி இல்லையா ?

அடடே இதற்கும் நீங்கள் சொல்லிய பின் தான் 
முடிவெடுப்பேன் என்ன செய்வது காலாகாலம் 
பழகிப்போன பழக்கம் ஆயிற்றே உடனே நீங்கள் 
எனக்கு பதில் தெரிவிக்கவும் 
உங்கள் பதிலை எதிர்பார்த்து 
எதிரில் உள்ள மரத்தின் 
கீழே இருப்பேன் சரிதானா ?

By 
M.venkatesan.M.Sc.,M.Phil.,
Lecturer in Mathematics
Salem- Tamilnadu,
+919488041369


No comments:

Post a Comment