Search This Blog

Friday, July 30, 2010

எண்ணில் (என்னில்) ஆயிரம்


பழைய நாட்களை எண்ணிப் பார்கிறேன்
படிக்கும் காலத்திலும் பழக ஒரு பண்பாளரும்
பணிவாய் வாய்த்தது இல்லை பழித்தே
பழகிய பள்ளி தோழர்களோடு பழகியே

பள்ளியை பால் நிலா பரவச மாய்
பகிர்ந்தே வந்தோம் பகலவனுடன்
பலகாலம் பரிகாச உடையுடனே பந்த
பாச பழகல் கொண்டோம் பண்பாலே !

பால் நிலவும் பழக பரவசம் கொண்டதாலே
பரண் வீட்டு ஓடும் பால் வீதி பார்க்க வைத்தாளே
பண்ணிசைத்து பாடினால் தான் பைரவனும்
பளிங்கு நீர் கொடுக்க மனம் கொள்வானா?

பல்கலை கழக தோழர்களும் பவிசு கொண்ட
பத்தரை மாற்று பல்லக்குகளாகவே பாரினில்
பலன் இல்லர் பதர் என்றே பட்டமிட்டனர் பசுமை
பாங்காய் பங்கயத்தாள் பார்வை இல்லாததால்

பகைத்தே பாங்காய் நம்மிடம் பரிசில் பெறும் பாடசாலையர் ,
பாடம் கேட்க மறுக்கும் எம் புகுமுக மாணவர்கள்
பாருக்கு வராது போனால் போருக்கு அழைக்கும்
பக்கத்துக்கு இருக்கை பரவச பார்முனை பழக்கம்

பால்வண்ண பதுமையும் பாசமிலா பாலைவன மண்ணாக,
பாடல் வரிகளாய் பதைத்தே பகைத்தே போனாளே,
பரந்தாமனே பரிசில் பந்தாக பலநாளும் உன்
பால் வீதி பாடலுக்கு பரிகாச பண்ணாக ?

Tuesday, July 27, 2010

அடடா அதிகமாய் மழை பொழிகிறதே

அடடா அதிகமாய் மழை பொழிகிறதே
Share
அடடா அதிகமாய் மழை பொழிகிறதே


அடடா அதிகமாய் மழை பொழிகிறதே
அவள் வீடு சென்று இருப்பாளோ இல்லையோ

அவள் தாய் அவளை காணாது துடித்து போய் விடுவாளே
அன்பான மழைத்துளி தானே என்று இருந்து விடமுடியாதே

அன்னத்தின் அழகிய மேனி நோகுமாறு காய்ச்சல் வருமே
அம்பை கொண்டு குத்தியது போன்று மருந்திட வருமே

அன்பான அவள் வருந்துவாளே அடடா என்ன செய்கின்றாளோ?
அன்பு காட்ட என்னக்கு ஆள் இல்லாது போய்விடுமே !

அடடா அவளுக்கு முள் குத்துமே என நினைத்தேன்
அவள் காலுக்கு காலணி அணிந்து இருந்தாள் எனவே

அவள் பொற்பாதம் வலிக்குமே என சற்று கவலை இல்லை
அன்பு அதிகமானால் மன அம்புகள் குத்துகின்றதே!


அவள் வருந்துவாளே
அன்பு அதிகமானால் மன அம்புகள் குத்துகின்றதே!

Monday, July 26, 2010

என் சொந்த நிலா

என் சொந்த நிலா
என்னை விட்டு
எட்டி நின்றதால்

என்னை ஏளனம் செய்யும்
என் மனமே நான்
எது செய்வேன்

அவள்


அவள் எளிமையின் நீல நிறத்தவள் 
கோபத்தின் போது சிகப்பு நிறத்தவள்
மகிழ்வின் போது மஞ்சள் நிறத்தவள்
வாழ்த்திடும் போது பசுமை நிறத்தவள்

சாதுவானபோது சந்தன நிறத்தவள்
கனிவான போது கருப்பு நிறத்தவள்
படித்திடும் போது பழுப்பு நிறத்தவள்
குடும்பத்தின் குங்கும நிறத்தவள்

ஆனந்த ஆரஞ்சு நிறத்தவள்
மனம் நிறைந்த போது மணல் நிறத்தவள்
பழகும் போது பால் நிறத்தவள்
உயிரை கொடுக்கும் போது ஊதா நிறத்தவள்
MY LOVER

என்னவள்

மாலை ஒளி மங்கி நிற்கும் அழகிய வேளை
என் இனியாள் தன் தோழியோடு அழகிய தன்
இல்லம் திரும்ப எத்தனித்த அந்த வேளையில்

இந்த இளம் சூரியன் தன் இனிய தோழியோடு சற்றே
விளையாட நினைத்து இனிமையான மிக மிக
மென்மையான மேல்காற்றை வீச பணித்திட

காற்றும் தன் தோழியோடு விளையாட நினைத்து
சில்லிடும் பனி காற்றை தோகை மயிலின் இனிமையாய்
வீசிட அடடா என்னவளும் தோகை மயில் ஆனாளே !

அந்த அழகிய பூவினங்களும் தன் தோழியின் மீது
மிகுந்த உரிமையோடு சுகந்த நறுமண வாசனை
மிக்க மகரந்த பொடிகளை தூவின மிக அழகாக

வண்டினங்களும் அந்த மகரந்த பொடிகளை
மேலும் உரிமையோடு தன் தோழிக்கு அழகாக
அணிவித்து அழகு பார்த்தது ஆரணங்காய் அவள் !

அடடா சந்திர தோழியும் தன் தோழியுடனான நட்பை
புதுபிக்கவேண்டி தன் இனிய வெண்ணிற மந்திர
கதிர்களை என்னவளின் மேனி நிறம் ஆக்கிவிட்டாளே !

பூவினமும் வண்டினமும் அதன் நட்பினமாம்
புள்ளினமும் கூ கூ கூ என கவிதை பாடி
பண் இசைத்த வேளை பார் போற்றும் நட்பு வேளை ஆனதே !

சந்திர தோழியும்
தன் இனிய வெண்ணிற மந்திர
கதிர்களை என்னவளின் மேனி நிறம் ஆக்கிவிட்டாளே !
மாலை ஒளி மங்கி நிற்கும் அழகிய வேளை
என் இனியாள் தன் தோழியோடு அழகிய தன்
இல்லம் திரும்ப எத்தனித்த அந்த வேளை
நட்பு வேளை

இரவும் நிலவும்

இரவும் நிலவும் 

நிலவும் இரவானதே இங்கே சில 
நிலை பெற்ற மாந்தர் மனத்தால் 

நிற்றலும் கனவு ஆகிபோனதே 
பகலும் இரவாகிபோனதே இங்கு 

நிலையும் இரவாகி போனதே 
நிலவும் கனவாகி போனதே 

நில்லாத நிலவும் இன்று இப்போது 
நிலையறு நிலையில் நின்று போனதே 

நினைப்பதை மறந்து எங்கள் 
நிலை மறந்து வீணில் நின்று போனதே 

நிலவே நிலவே நீயும் நீயும் உன் 
நிறம் கொண்ட குணம் மறந்தது ஏனோ ?

நில்லா மனிதர் பலர் போலே எம்மிடமும் 
நில்லாது போனாயே மனமின்றி குணமின்றி 

நிலைத்தாய் உன் நிலையில் நிலைத்தாய் நீ 
நிலைத்தது நிலைத்தது ஒ நீ இறந்த பின் தானோ ?

நிலை இல் நிலையில் உன் இன் நிலை நான் உன் 
நன்றி மறந்தேனோ ? நன்றி மறந்தேனோ ?

நிலவே நீயும் என்னை போலவே இறந்தாயோ ?
நிலவே நீயும் என்னை போலவே இறந்தாயோ ?

M.venkatesan.M.sc.,M.Phil.,
Lecturer in Mathematics,
Salem-Tamilnadu,
South India.
cell:+919488041369

நிலவே நீயும் என்னை போலவே இறந்தாயோ ?
இரவும் நிலவும்

மனம்

என்னவள் மனமும் முகமும் கழுவி
மை தீட்டிய மெல்லிய கவிதை கதை

என்னவள் மை தீட்ட மைக்கோல்
காணோமாம் அதற்காய் அந்த அந்த
மெய் நிறத்தாள் யார் யாரை தூது அனுப்பலாம்
என யோசித்து பார்த்தாளாம் சொல்கிறேன்

மைனாவை தூது அனுப்பினால் எம்
மெய் கண்டு வெட்க பட்டு சொல்லாது
இருந்து விடுவாளோவென பயந்தாளாம்

கிள்ளையை தூது அனுபினால் நம் இனிய
பசுமையானபிள்ளை மனது கண்டுவிட்டு
கருத்தை மறந்து விடுவாள் இக்கிள்ளை
என்றே மனம் யோசித்து பயந்தாளாம்

வெண் பஞ்சு மேகத்தை தூது அனுப்பினால் நம்
வெண் பளிங்கு மனம் கண்டு மோகம் கொண்டு
வெளிறி போவாள் என்றே வெகுண்டு போனாளாம்

காற்றை தூது விடலாம் என்றால் நம்
சுகந்த நறுமணம் கண்டு மனம் கலந்து
இருந்து விட்டால் என்செய்வது என கலங்கி போனாளாம்

சூரியனைத்தான் தூது விடலாம் என்றால் சூதாக
சூரியன் சுட்டு விட்டால் என பயந்தாளாம்
பின் சுற்றத்தை தான் அனுப்பவேண்டும் என முடிவெடுத்தாளாம்

தன் மனதை தூது விடலாமா என்றால்
உரிமை மனதை கண்டுவிட்டால்
மானாக மாறிவிடுமே மனம் என்றே பயந்தாளாம்

என்னவளை காணாது சென்ற என்மனதை
கண்டு அவள் காணாது கண்ட மைக்கோலால்
என்மனதையே வர்ணமாய் தீட்டி அழகு பார்த்தாளேஎன்னவள் மனம்
மனம்
மை தீட்டிய மெல்லிய கவிதை