Search This Blog

Monday, July 26, 2010

மனம்

என்னவள் மனமும் முகமும் கழுவி
மை தீட்டிய மெல்லிய கவிதை கதை

என்னவள் மை தீட்ட மைக்கோல்
காணோமாம் அதற்காய் அந்த அந்த
மெய் நிறத்தாள் யார் யாரை தூது அனுப்பலாம்
என யோசித்து பார்த்தாளாம் சொல்கிறேன்

மைனாவை தூது அனுப்பினால் எம்
மெய் கண்டு வெட்க பட்டு சொல்லாது
இருந்து விடுவாளோவென பயந்தாளாம்

கிள்ளையை தூது அனுபினால் நம் இனிய
பசுமையானபிள்ளை மனது கண்டுவிட்டு
கருத்தை மறந்து விடுவாள் இக்கிள்ளை
என்றே மனம் யோசித்து பயந்தாளாம்

வெண் பஞ்சு மேகத்தை தூது அனுப்பினால் நம்
வெண் பளிங்கு மனம் கண்டு மோகம் கொண்டு
வெளிறி போவாள் என்றே வெகுண்டு போனாளாம்

காற்றை தூது விடலாம் என்றால் நம்
சுகந்த நறுமணம் கண்டு மனம் கலந்து
இருந்து விட்டால் என்செய்வது என கலங்கி போனாளாம்

சூரியனைத்தான் தூது விடலாம் என்றால் சூதாக
சூரியன் சுட்டு விட்டால் என பயந்தாளாம்
பின் சுற்றத்தை தான் அனுப்பவேண்டும் என முடிவெடுத்தாளாம்

தன் மனதை தூது விடலாமா என்றால்
உரிமை மனதை கண்டுவிட்டால்
மானாக மாறிவிடுமே மனம் என்றே பயந்தாளாம்

என்னவளை காணாது சென்ற என்மனதை
கண்டு அவள் காணாது கண்ட மைக்கோலால்
என்மனதையே வர்ணமாய் தீட்டி அழகு பார்த்தாளே



என்னவள் மனம்
மனம்
மை தீட்டிய மெல்லிய கவிதை

No comments:

Post a Comment