Search This Blog

Friday, July 30, 2010

எண்ணில் (என்னில்) ஆயிரம்


பழைய நாட்களை எண்ணிப் பார்கிறேன்
படிக்கும் காலத்திலும் பழக ஒரு பண்பாளரும்
பணிவாய் வாய்த்தது இல்லை பழித்தே
பழகிய பள்ளி தோழர்களோடு பழகியே

பள்ளியை பால் நிலா பரவச மாய்
பகிர்ந்தே வந்தோம் பகலவனுடன்
பலகாலம் பரிகாச உடையுடனே பந்த
பாச பழகல் கொண்டோம் பண்பாலே !

பால் நிலவும் பழக பரவசம் கொண்டதாலே
பரண் வீட்டு ஓடும் பால் வீதி பார்க்க வைத்தாளே
பண்ணிசைத்து பாடினால் தான் பைரவனும்
பளிங்கு நீர் கொடுக்க மனம் கொள்வானா?

பல்கலை கழக தோழர்களும் பவிசு கொண்ட
பத்தரை மாற்று பல்லக்குகளாகவே பாரினில்
பலன் இல்லர் பதர் என்றே பட்டமிட்டனர் பசுமை
பாங்காய் பங்கயத்தாள் பார்வை இல்லாததால்

பகைத்தே பாங்காய் நம்மிடம் பரிசில் பெறும் பாடசாலையர் ,
பாடம் கேட்க மறுக்கும் எம் புகுமுக மாணவர்கள்
பாருக்கு வராது போனால் போருக்கு அழைக்கும்
பக்கத்துக்கு இருக்கை பரவச பார்முனை பழக்கம்

பால்வண்ண பதுமையும் பாசமிலா பாலைவன மண்ணாக,
பாடல் வரிகளாய் பதைத்தே பகைத்தே போனாளே,
பரந்தாமனே பரிசில் பந்தாக பலநாளும் உன்
பால் வீதி பாடலுக்கு பரிகாச பண்ணாக ?

No comments:

Post a Comment